ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட், திடீரென வெடித்ததில் 11 மாணவர்கள் காயம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் காட்ஷிலாவில் உள்ள காட்ஷிலா கல்லூரியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் இருவர் ராக்கெட் மாடலை காட்சிப்படுத்தினர். அப்போது, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர் ஒருவர் ராக்கெட் மாடலை செயல்படுத்தி காட்ட முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.